சினிமா செய்திகள்

காலத்துக்கு ஏற்ப இசையை மாற்றி கொடுப்பதில் தப்பு இல்லை - தேவா

‘‘இந்த காலத்துக்கு ஏற்ப பாடல்களுக்கு இசையமைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். காலத்துக்கு ஏற்ப இசையை மாற்றிக் கொடுக்க வேண்டும் ’’ என்று தேவா கூறினார்.

தினத்தந்தி

'ராமகிருஷ்ணா' புகழ் ஜெய் ஆகாஷ், 'அமைச்சர் ரிட்டன்ஸ்' என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து வருகிறார். கரை வேட்டி கட்டிய ஒரு கறைபடாத அமைச்சரின் காதல் கதை இது. தன்னிடம் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களை தடுத்து முன்மாதிரி அமைச்சர் ஆகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் கதை, இது. மிக நீண்ட இடைவெளிக்குப்பின், தேவா இசையமைத்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

''நான் இசையமைத்து 10 வருடங்கள் ஆகிறது. அதற்கு காரணம், என் உடல்நிலை மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்ததுதான். இப்போது உள்ள சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் புரியவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்த காலத்துக்கு ஏற்ப பாடல்களுக்கு இசையமைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனவே "காலத்துக்கு ஏற்ப இசையை மாற்றிக் கொடுக்க வேண்டும். அதில் தப்பு இல்லை.''

இவ்வாறு தேவா கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்