சினிமா செய்திகள்

வித்யா பிரதீப் நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

நடிகை வித்யா பிரதீப் நடிக்கும் 'திரும்பிப்பார்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

வித்யா பிரதீப், ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் 'திரும்பிப்பார்'. இப்ராஹிம் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜ்குமார், டேனியல், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போரில் எதிரிகளை தோற்கடிக்கப் பயன்படுத்தப்படும் 'நிழல் நடை' என்ற உத்தியை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்த படத்துக்கு தேவ்குரு இசையமைத்துள்ளார். சக்திபிரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆர்.பிரகாஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. விரைவில் 'திரும்பிப்பார்' படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு