சினிமா செய்திகள்

திருவள்ளுவர் விவகாரம்; நடிகை கஸ்தூரி ஆவேசம்

பா. ஜனதா டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து திருநீறு பூசிய படத்தை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவள்ளுவருக்கு மத சாயம் பூச முற்படுவதாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதாக விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. நடிகை கஸ்தூரியும் திருவள்ளுவர் விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

வெள்ளை உடை என்றாலும் ஓகே. காவி வஸ்திரம் என்றாலும் ஓகே. திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன. எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு... திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி. வெறும் கட்சி கொடி அல்ல. இப்போது வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்து விட்டால் தமிழ் நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைத்து விடுமா.?

இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...