சினிமா செய்திகள்

இதற்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா - சந்தானம் பதிவிட்ட வீடியோ

நடிகர் சந்தானம் தற்போது கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் 'கிக்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இதைத் தொடர்ந்து சந்தானம் மீண்டும் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில் "இதற்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?