சினிமா செய்திகள்

வெளிவராத படத்திற்கு 3 மாநில விருதுகள் - திரைத்துறையினர் அதிர்ச்சி

நடிகர் விமல், ஸ்ரேயா நடித்த திரைப்படம் "சண்டக்காரி".

சென்னை,

திரையரங்கு மற்றும் ஓடிடி என எதிலுமே வெளியாகாத ரீமேக் படத்திற்கு 3 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் வெளியான "தி பாஸ்" படத்தை ரீமேக் செய்து, நடிகர் விமல், ஸ்ரேயா நடித்த திரைப்படம் தான் "சண்டக்காரி". இந்த படத்திற்கு 2020ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான 3வது பரிசு, கலை இயக்குநர், பாடகர் என மூன்று பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

ஆனால், திரையரங்கிலோ, ஓடிடி தளத்திலோ ரிலீஸ் செய்யப்படாத இந்த படத்திற்கு, 3 பிரிவுகளில் தமிழக அரசு விருது வழங்கியிருப்பது இணையத்தில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது

SCROLL FOR NEXT