சென்னை,
பாலிவுட்டில் டைகர் ஷ்ராஃப் மற்றும் க்ரீட்டி சனோன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கணபத் . இந்த படத்தை இயக்குனர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். மேலும் இதில் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், டைகர் ஷ்ராஃப் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், படம் மாபெரும் வெற்றியடையவும் வாழ்த்துகள், என்று அதில் பதிவிட்டுள்ளார்.