சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் விபத்து: டைட்டானிக் பட நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

குரோசியா நாட்டில் நடக்கும் லீ படத்தின் படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டு கேட் வின்ஸ்லெட் கீழே விழுந்த பலத்து அடிபட்டு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தினத்தந்தி

உலக புகழ்பெற்ற 'டைட்டானிக்' படத்தில் கதாநாயகியாக நடித்த கேட் வின்ஸ்லெட்டை எளிதில் யாரும் மறந்து விட முடியாது. இந்த படம் 1999-ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.

டைட்டானிக் படத்துக்கு பிறகு கேட் வின்ஸ்லெட்டுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதுவரை 42 படங்களில் நடித்து ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

தற்போது குரோசியா நாட்டில் நடக்கும் லீ படத்தின் படப்பிடிப்பில் கேட் வின்ஸ்லெட் கலந்து கொண்டு நடித்து வந்தார். அப்போது படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டு கேட் வின்ஸ்லெட் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கேட் வின்ஸ்லெட்டுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

கேட் வின்ஸ்லெட் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து