சினிமா செய்திகள்

பிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்-க்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து தமிழில் தயாராகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. அதனை அனுசுயா மறுத்தார்.

இந்த நிலையில் அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன். தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

அனுசுயா சமீபத்தில் நடிகை நிஹாரிகா உள்ளிட்ட சிலரை சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்