சினிமா செய்திகள்

விஜய்க்கு ஜேம்ஸ்பாண்ட் வேடம் மிஷ்கின் விருப்பம்

விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையை டைரக்டர் மிஷ்கின் வெளியிட்டார்.

தினத்தந்தி

டைரக்டர் மிஷ்கின் டுவிட்டர் ஸ்பேஸ் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம், உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால், அவரை என்ன வேடத்தில் நடிக்க வைப்பீர்கள்? என்று ஒரு ரசிகர் கேட்டார்.

அந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், ஏற்கனவே தீர்மானித்து விட்டது போல், விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வைப்பேன் என்று மிஷ்கின் பதில் அளித்தார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்திருப்பது பற்றி இன்னொரு ரசிகர் கேட்டார். அதற்கு பதில் அளிக்கும்போது, பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார் மிஷ்கின்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை