சினிமா செய்திகள்

இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் - நடிகர் நாசர்

இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பின் நடிகர் நாசர் பேட்டி அளித்தார்.

தினத்தந்தி

சென்னை

23ஆம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் தென்சென்னை மாவட்ட பதிவாளர். ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை தொடர்ந்து தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி அளித்தது சென்னை ஐகோர்ட்.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர்.

பின்னர் நாசர் பேட்டி அளித்தார். அப்போது, நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நடிகர் சங்கம் பற்றி முழுமையாக, அனைத்தையும் துணை முதல்வர் கேட்டறிந்தார். இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என கூறினார்.

பின்னர் சென்னையில் நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனுடன், பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் நாசர் சந்தித்து பேசினார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்