சினிமா செய்திகள்

'ஏ.ஆர்.எம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்

டொவினோ தாமஸ் நடித்துள்ள 'ஏ.ஆர்.எம்' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தினத்தந்தி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டொவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது இவர், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' (ஏ.ஆர்.எம்) படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்தை சுஜீத் நம்பியார் எழுத்தில் அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கி உள்ளார். டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் கீர்த்தி ஷெட்டி. பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 3-டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. இப்படம் வருகிற 12-ந் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், தற்போது இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்