சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படத்தின் டிரைலர் வெளியானது..!

'அயலான்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், 'அயலான்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள டிரைலர், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்