சினிமா செய்திகள்

அருண்விஜய் நடித்துள்ள 'தமிழ் ராக்கர்ஸ்' தொடரின் டிரைலர் வெளியானது..!

நடிகர் அருண்விஜய் நடித்துள்ள 'தமிழ் ராக்கர்ஸ்' வெப்தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'ஈரம்', 'குற்றம் 23' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப்தொடர் 'தமிழ் ராக்கர்ஸ்'. இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மனோஜ் குமார் கலைவாணன் எழுதியுள்ள இந்த வெப் தொடரை ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சைபர் கிரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் மையமாக வைத்து இந்த வெப்தொடர் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த தொடரின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் வெப்தொடர் வருகிற ஆகஸ்ட் 19-ந்தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது