சினிமா செய்திகள்

ஆக்‌ஷனில் மிரட்டும் விக்ரம்.! 'கோப்ரா'படத்தின் டிரைலர் வெளியானது

விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் வருவது போன்று வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை,

டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.  இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இம்மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்பத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் வருவது போன்று வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்