சினிமா செய்திகள்

திரிஷ்யம் 2 இந்தியில் ரீமேக்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்து மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

தினத்தந்தி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்து மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து திரிஷ்யம் படம் தமிழில் கமல்ஹாசன் கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் ஆனது.

இந்த நிலையில் திரிஷ்யம் 2-ம் பாகமும் மலையாளத்தில் தயாராகி சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் 2-ம் பாகத்திலும் மோகன்லால் மீனா நடித்து இருந்தனர். இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

இதில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் திரிஷ்யம் 2-ம் பாகம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். திரிஷ்யம் முதல் பாகம் இந்தி ரீமேக்கில் மோகன்லால் கதாபாத்திரத்தில் அஜய்தேவ்கானும் மீனா கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவும் நடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்திலும் அவர்களே நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு