சினிமா செய்திகள்

டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” படத்தின் 2வது பாடல் நாளை வெளீயீடு

‘ஐபிஎல்’ படத்தில் டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஐபிஎல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது.

டிடிஎப் வாசன் நடித்துள்ள ஐபிஎல் படத்திலிருந்து அப்போ இப்போ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை அஸ்வின் விநாயகமூர்த்தி பாடியுள்ளார். பாடல் வரிகளை கானா ருத்ரா எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் படத்திலிருந்து யாவாலோ பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து