சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' மே மாதம் வெளியாகிறது..?

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஆர்டிக்கிள் 15 தமிழில் நெஞ்சுக்கு நீதியாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியது. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு படத்தை வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை