சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிக்கிள் 15' தமிழில் 'நெஞ்சுக்கு நீதி'யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, யாமினி சந்தர் அப்துல் லீ, ராட்சசன் சரவணன்உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்கழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 20-ந்தேதி 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்