சினிமா செய்திகள்

ஜான்வி கபூரின் 'உலாஜ்' படத்தின் புதிய அப்பேட்

நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'உலாஜ்' படத்தின் புதிய போஸ்டர்களை பகிர்ந்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்துள்ளார். தேவரா என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது இவர் 'உலாஜ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை, தயாரிப்பாளர் சுதன்ஷு சாரியா இயக்கியுள்ளார். ஜிங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் டிரெய்லர் கடந்த 16-ந் தேதி வெளியானது. தற்பேது இந்த படத்தின் போஸ்டர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் குல்ஷன் தேவையா, ரோஷன் மேத்யூ, ராஜேஷ் தைலாங், மெய்யாங் சாங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது..

View this post on Instagram

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை