சினிமா செய்திகள்

வாணிபோஜன் நடிக்கும் 'கேசினோ' படத்தின் அப்டேட்..!

நடிகை வாணிபோஜன் நடிக்கும் 'கேசினோ' திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகை வாணிபோஜன் மற்றும் 'மெஹந்தி சர்க்கஸ்', 'பெண்குயின்' ஆகிய திரைப்படங்களில் நடித்த மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்து தற்போது ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு 'கேசினோ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஜான் மகேந்திரன் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். கேசினோ திரைப்படத்தில் ரங்கராஜ் மற்றும் வாணிபோஜன் இருவரும் வழக்கமான கதாநாயகன்-நாயகி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது வாணிபோஜன் படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. கேசினோ திரைப்படத்திற்கு ஸ்டான்லி சேவியர் இசையமைத்துள்ளார். விக்னேஷ் ஜே.கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு