சினிமா செய்திகள்

நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'காதலும் கடந்து போகும்', 'காலா', 'விக்ரம் வேதா' போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் மணிகண்டன். 'ஜெய் பீம்' திரைப்படத்தில் அவருடைய நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியானது. இளைய தலைமுறையிடம் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். நடிகர் மணிகண்டன் 'நரை எழுதும் சுயசரிதம்' என்ற திரைப்படத்தை இயக்கியும் உள்ளார். நடிகர் மணிகண்டன் 'தி கோட்' படத்தில் விஜயகாந்துக்கு டப்பிங் பேசியுள்ளார்.

தற்போது, நித்தம் ஒரு வானம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு