சென்னை,
2012 ஆம் ஆண்டு வெளியான கப்பர் சிங் படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் உஸ்தாத் பகத் சிங்.
படத்தில் பவன் கல்யாண் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் கோடை விடுமுறை காலத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வருகிற 9-ம் தேதி மாலை 6.30 மணிக்கு இப்பாடலின் புரோமோ வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.