சினிமா செய்திகள்

தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த ’கேஜிஎப்’ பட நடிகையின் மகள்

இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

இயககுனர் அஜய் பூபதி சமீபத்தில் தனது நான்காவது படத்தை அறிவித்தார், இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மகேஷ் பாபுவின் உறவினராவார்.

பலரும் எதிர்பார்த்ததுபோல, கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் கதாநாயகிக்கான அறிவிப்பு போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

தற்காலிகமாக எபி4 எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் ராஷா ததானி தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். அவர் இதற்கு முன்பு ஆசாத்தில் நடித்திருந்தார், அதில் இடம்பெற்ற உயி அம்மா பாடலின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றார்.

படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து