சினிமா செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா பட வில்லன் நடிகருக்கு கொரோனா

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நடிகர்களும் வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.

தினத்தந்தி

தற்போது பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். பரேஷ் ராவல் சமீபத்தில் மும்பையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். தடுப்பூசி போட்ட சில தினங்களுக்கு பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் பரேஷ் ராவலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். பரேஷ் ராவல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் மாதவன், அமீர்கான், மலையாள நடிகர் பக்ரூ ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை