சினிமா செய்திகள்

மாமன்னன் படத்தில் வடிவேலு - மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு..!

மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு 'மாமன்னன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'மாமன்னன்' திரைப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு  உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், 'ஒரு தொடர் கனவு நிறைவடைந்தது. மாமன்னனில் வைகைபுயல்' என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை