சினிமா செய்திகள்

‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்

‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்.

தினத்தந்தி

வடிவேல் நடிக்க இருக்கும் நாய் சேகர் படத்தை டைரக்டர் சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் கதை எப்படி உருவானது? என்பதை சுராஜ் விளக்கினார். அவர் கூறியதாவது:-

கொரோனா காலகட்டத்தில் அனைவரும் பயத்தில் இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேல் இதற்கு முன்பு இதுபோன்ற வேடத்தில் நடித்ததில்லை. அவருடைய மறுபிரவேசம் முழு நீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.அதற்காக 2 வருடங்கள் செலவு செய்து சிரித்து பேசி, கதையை உருவாக்கினோம். இதை படமாக தொடங்க முயன்றபோது, பல பிரச்சினைகள் தடையை ஏற்படுத்தின. அதற்கான கதவை சுபாஷ்கரன் திறந்து வைத்தார்.இதற்கு முன் நான் சில தோல்வி படங்களை கொடுத்து இருக்கலாம். நீண்ட இடைவேளைக்கு பின் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து இருக்கிறேன். வடிவேல் இடம் காலியாகவே உள்ளது. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்.

இவ்வாறு சுராஜ் பேசினார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?