சென்னை,
தெலுங்கில் ‘பேபி’ திரைப்படத்தின் மூலம் ஒரே இரவில் பிரபலமான வைஷ்ணவி சைதன்யா, தற்போது கோலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராக உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், இப்போது தமிழில் கதாநாயகியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வைஷ்ணவியின் இயல்பான நடிப்பும் கவர்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய படம் ஹிட்டானால், கோலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வைஷ்ணவி மாறுவார் என்பதில் சந்தேகமில்லை.