சினிமா செய்திகள்

"வாம்மா நீ தான் என் தங்கச்சி" - தூய்மை பணியாளரை ஆரத்தழுவி போட்டோ எடுத்த நடிகர் வடிவேலு...!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில், நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்.

ஈரோடு,

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சினிமா நடிகர் வடிவேலு நேற்று மாலை 3.15 மணிக்கு காரில் வந்தார். பின்னர் அவர் காரை விட்டு இறங்கி கோவிலுக்கு சென்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்து விபூதியை வாங்கி நெற்றில் பூசிக்கொண்டார். பின்னா அவர் அங்கிருந்துவெளியேறி கோவிலில் உள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டார்.

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சினிமா நடிகர் வடிவேலு, வந்த தகவல் பக்தர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் பக்தர்களுக்கு தெரியவந்தது. உடனே அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனே அவருடன் பக்தர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அப்போது அங்கு கோவிலில் துப்புரவு வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கிபடி வந்து வடிவேலுவின் காலில் விழுந்து வணங்கினார். உடனே அந்த பெண்ணை தூக்கி விட்டதுடன், நன்றாக இருங்கள் என அவரை வாழ்த்தினார். மேலும் அந்த பெண்ணை "வாம்மா நீ தான் என் தங்கச்சி" எனக்கூறியபடி, ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...