சினிமா செய்திகள்

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்த நடிகர் விஜய் சேதுபதி

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்தார்.

தினத்தந்தி

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் கடந்த 2010-ம் ஆண்டு பொதுமக்களும் விலங்குகளை தத்தெடுத்து வளர்க் கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், நடிகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பூங்காவில் பல்வேறு விலங்குகளை தத்தெடுத்து அதற்கு உண்டான செலவின தொகையை வழங்கி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று உலக வன உயிரின நாளையொட்டி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் பூங்காவுக்கு நேரில் வந்தார். பின்னர் பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து மகிழ்ந்தார்.

இதனையடுத்து பூங்காவில் உள்ள ஆதித்யா, ஆர்த்தி என்ற 2 வங்கப்புலிகளை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார். தத்து எடுக்கப்பட்ட இந்த 2 வங்கப்புலிகளுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்.

இதனையடுத்து விஜய் சேதுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது வண்டலூர் பூங்காவுக்கு வந்து விலங்குகளை பார்த்தேன்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்