சினிமா செய்திகள்

2 பாகங்களாக உருவாகிறதா ’வாரணாசி’ ? - எஸ்.எஸ்.ராஜமவுலி பதில்

‘வாரணாசி’ படம் இரு பாகங்களாக உருவாகிறா? என்ற கேள்விக்கு எஸ்.எஸ்.ராஜமவுலி பதிலளித்தார்

சென்னை,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது புதிய படமான ‘வாரணாசி’யின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’யாகவும், பிரித்விராஜ் ‘கும்பா’ என்ற வேடத்திலும் நடிக்கின்றனர்.

இந்த படம் 2027 ஏப்ரல் 7-ம் தேதி ஐமேக்ஸ் (IMAX) திரைகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ராஜமவுலி, படம் குறித்த பல கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ‘வாரணாசி’ படம் இரு பாகங்களாக உருவாகிறா? என்ற கேள்விக்கும் பதிலளித்தார்

‘வாரணாசி’ படம் ஒரே பாகமாக வெளியாகும் என்றும் அதன் ஓட்ட நேரம் சுமார் மூன்று மணி நேரம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT