சினிமா செய்திகள்

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தம்பதிக்கு ஆண் குழந்தை...ரசிகர்கள் வாழ்த்து

லாவண்யா திரிபாதி குழந்தையை மடியில் அணைத்துக் கொண்டிருக்கும் படத்தை வருண் தேஜ் பகிர்ந்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. நேற்று ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லாவண்யா திரிபாதி குழந்தையை மடியில் அணைத்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தை வருண் தேஜ் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

தற்போது வருண் தேஜ் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திகில்-நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் லாவண்யா திரிபாதி ''தணல்'', ''சதி லீலாவதி'' ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படங்கள் திரைக்கு வர உள்ளன.

View this post on Instagram

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை