சினிமா செய்திகள்

சரித்திர கதையில் நடிக்க விரும்பும் வசுந்தரா

சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை உள்ளது என்கிறார் வசுந்தரா.

தினத்தந்தி

எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் நடித்து பிரபலமானவர் வசுந்தரா. 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்தார். 'வட்டாரம், ஜெயம் கொண்டான், போராளி, பக்ரீத், கண்ணே கலைமானே' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

வசுந்தரா அளித்துள்ள பேட்டியில், ''மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் கண்ணை நம்பாதே, ஜேபி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் 'தலைக்கூத்தல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். லட்சுமி நாராயணன் இயக்கும் திரில்லர் படமொன்றிலும் நடிக்கிறேன்.

ஓ.டி.டி. தளங்கள் புதுவிதமான படைப்புகளை கொடுத்து வருகின்றன. ஓ.டி.டி. தளத்திற்கு நிறைய புது இயக்குனர்கள் வருகிறார்கள். ஓ.டி.டி நல்ல மாற்றம்தான். ஓ.டி.டி யால் சினிமா என்ன ஆகுமோ என்று பலரும் கவலைப்பட்டனர்.

ஆனால் எப்போதுமே சினிமா துறை தனக்கான வழியை தானே கண்டுபிடித்துக் கொள்ளும். 'பொன்னியின் செல்வன்' போன்ற சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை உள்ளது. இந்த வருடம் நிறைய ஓ.டி.டி. படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்'' என்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு