சென்னை
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக நடிகர் பொன்வண்ணன் கடிதம் கொடுத்தார். நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணனின் ராஜினாமா கடிதம் நடிகர் சங்கத்தால் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
விஷால் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பொன்வண்ணன் ராஜினாமா என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இது குறித்து பொன்வண்ணன் கடிதத்தில் கூறியதாவது:-
நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல் என கடிதத்தில் பொன்வண்ணன் கூறி உள்ளார்.