சினிமா செய்திகள்

துருவ் விக்ரமின் 'பைசன்' - திருநெல்வேலியில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

பூஜை விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக நடிகர் விக்ரமும் கலந்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு 'பைசன்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக நடிகர் விக்ரமும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புகைப்படம் எடுக்க மக்கள் திரண்டனர். 

View this post on Instagram

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது