சினிமா செய்திகள்

வலிமை படத்தின் பாடலை தன் அம்மாவிற்கு அர்ப்பணித்த விக்னேஷ் சிவன்..!

வலிமை திரைப்படத்தின் 'மதர்சாங்' பாடலை தன் அம்மாவிற்கு அர்ப்பணிப்பதாக டைரக்டர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் அஜித் குமார் நடிப்பில் டைரக்டர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக டைரக்டர் விக்னேஷ்சிவன் எழுதி யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் பாடியிருந்த 'நாங்க வேற மாறி' பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூடியூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வலிமை படத்தின் 2-வது பாடலாக 'மதர் சாங்' என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலையும் டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இந்த பாடலை தன்னுடைய அம்மாவிற்கு அர்ப்பணிப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், 'ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் என்னுடைய அம்மா, அன்புள்ள மீனா குமாரிக்கு இந்த பாடலை அர்ப்பணம் செய்கிறேன். 

அம்மாவிற்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று எப்போதும் ஆசைப்பட்டேன். இப்போது எச். வினோத் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரே ஒரு அஜித் சாரின் படத்தில் பாடல் எழுதியிருக்கிறேன். இதற்கு மேல் நான் பாக்கியம் பெற முடியுமா?' என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்