சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பிகில்’ படம் முன்கூட்டியே ரிலீஸ்?

அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

அட்லி இயக்கும் பிகில் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு இறுதி நாளில் துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் 400 பேருக்கு தங்க மோதிரங்களை அவர் பரிசாகவும் வழங்கினார். இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

தீபாவளிக்கு வருவதாக இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களை தள்ளி வைத்துள்ளதால் பிகில் மட்டுமே தீபாவளிக்கு தனித்து திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே 24-ந் தேதி வியாழக்கிழமையன்று படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதனால் வசூல் மேலும் உயரும் என்று நம்புகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாக பிகில் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் படம் தயாராகி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு