சினிமா செய்திகள்

நாடக கலை பின்னணியில் சுசீந்திரன் புதிய படம் 'வள்ளி மயில்'

‘வள்ளி மயில்’ படம் இந்திய சினிமாவில் முக்கியமானதாக இருக்கும் என்று டைரக்டர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

நாடக கலை பின்னணியில் உருவாகும் சுசீந்திரனின் புதிய படத்துக்கு, 'வள்ளி மயில்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை பற்றி டைரக்டர் சுசீந்திரன் கூறியதாவது:-

'''வள்ளி மயில்' கதையை 4 வருடங்களாக எழுதியிருக்கிறேன். நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். நிறைய உழைப்பை வாங்கியுள்ளது.

'வள்ளி மயில்' கதாபாத்திரத்தில் புதுமுகம் பரியா நடிக்கிறார். அவர்தான் இந்தப் படத்தின் உயிர். மறைந்த நடிகை கல்பனாவின் மகள், ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் இமான் கடுமையான உழைப்பாளி. அவருடன் நான் 9 படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இது சண்டை காட்சிகள், நகைச்சுவை, குடும்ப பாசம் கலந்த படமாக இருக்கும்."

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்