சினிமா செய்திகள்

68-வது படத்துக்கு தயாராகும் விஜய்

தினத்தந்தி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் விஜய் சமந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதில் நாயகியாக திரிஷா, வில்லனாக சஞ்சய்தத் நடிக்கின்றனர். தற்போது விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் முகாமிட்டு படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்கள்.

இன்னும் சில தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய உள்ளனர். அடுத்த மாதம் முதல் டப்பிங், இசைகோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடக்க உள்ளது. அக்டோபர் மாதம் லியோ திரைக்கு வருகிறது.

அடுத்து விஜய் தனது 68-வது படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். திரைக்கதை மற்றும் தயாரிப்புக்கு முந்தைய பணிகள் அனைத்தையும் வெங்கட்பிரபு முடித்து படப்பிடிப்புக்கு செல்லும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு