சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி புதிய தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அவர் கதை தேர்வு செய்யும் விதத்தை பார்த்து சக நடிகர்களே வியக்கிறார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக வந்தார். சீதக்காதியில் முதியவர் வேடம் ஏற்றார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லனாக இன்னொரு முகம் காட்டினார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக வருகிறார். மாஸ்டர் படத்தில் எனது கதாபாத்திரம் துளி கூட நல்லவன் கிடையாது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது. கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் நரைத்த தாடியுடன் வலம் வந்த அவர் இப்போது சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்துக்கு தன்னை மாற்றி இருக்கிறார். புதிய தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்