சினிமா செய்திகள்

திகில் கதையில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி திகில் படமொன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

திகில், பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நல்ல வசூலும் குவிக்கின்றன. இதனால் அதுமாதிரியான படங்கள் அதிகம் தயாராகின்றன.

முன்னணி நடிகர்-நடிகைகள் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதியும் திகில் படமொன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் விக்ரம், மாமனிதன் படங்கள் வந்தன. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடிக்கிறார். இந்தியில் மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மும்பைக்கார் தமிழில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆக தயாராகிறது. மேலும் 3 இயக்குனர்களிடம் கதை கேட்டு உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை