சென்னை,
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் திரைப்படத்தை வரும் 28ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகை சுருதிஹாசன் , நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷ்ன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் டார்க் திரில்லர் ஜானரில் 'டிரெயின்' படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.