சென்னை,
விக்ரம் படம் வரும் 3ம் தேதி திரைக்கு வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலைஞர்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, அமர் என்ற பாத்திரத்தில் பகத் பாசிலின் போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது EVIL IS COMING என்ற பதிவோடு சந்தானம் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.