சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்துக்கு 4 சர்வதேச விருதுகள்

மாமனிதன் படம் வெளியான உடனேயே பல்வேறு தரப்பிலிருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

தினத்தந்தி

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்து கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த மாமனிதன் படம் பிரபலங்களின் பாராட்டை பெற்று சர்வதேசஅளவிலும் விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் படம் திரையிடப்பட்டு சிறந்த ஆசிய படத்துக்கான தங்கப் பதக்கம் விருதை வென்றது. இந்த நிலையில் தற்போது பூட்டான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிலும் மாமனிதன் படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த சர்வதேச படம், சிறந்த குடும்ப திரைப்படம் ஆகிய 4 பிரிவுகளில் மாமனிதன் படம் விருதுகளை பெற்றுள்ளது. இந்த தகவலை டைரக்டர் சீனுராமசாமி தெரிவித்து உள்ளார். மாமனிதன் படம் சர்வதேச அளவில் விருது பெற்று வருவது விஜய்சேதுபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை