சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்

தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.

தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. இதையடுத்து 96 படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய பட அதிபர்கள் ஆர்வம் காட்டினர்.

தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்தும், திரிஷா வேடத்தில் சமந்தாவும் நடித்தனர். 96 படத்தில் நடித்த கவுரி கிஷனும் ஜானு படத்தில் வந்தார். இந்த படம் ஆந்திராவில் சுமாராகவே ஓடியது. கன்னட மொழியிலும் 96 படம் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.

தொடர்ந்து இந்தியிலும் 96 படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது இந்தி ரீமேக் உரிமையை அஜய் கபூர் வாங்கி உள்ளார். இந்தி 96 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்