சினிமா செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடித்த விஜயசாந்தி

பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அறிமுகமான விஜயசாந்தி 1980-களில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இரண்டு மொழிகளிலும் வெளியான வைஜயந்தி ஐ.பி.எஸ் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து பேசப்பட்டார் விஜயசாந்தி. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

2006-ல் சினிமாவை விட்டு ஒதுங்கி ஆந்திர அரசியலில் குதித்த அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மகேஷ்பாபு கதாநாயகனாக வரும் தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடிக்கிறார். தமிழிலும் இதை வெளியிடுகின்றனர். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

விஜயசாந்தி மேக்கப் போடும் தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, 12 ஆண்டுகளுக்கு பிறகு எனது நடிப்பை ரசிகர்களுக்கு காட்ட தயாராகி விட்டேன். படத்துக்கு சரிலேறு நீகெவரு என்று பெயரிட்டுள்ளனர். மகேஷ்பாபுவுக்கு இணையாக எனது கதாபாத்திரம் இருக்கும். பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது என்றார்.

இயக்குனர் அனில்ரால்புடி கூறும்போது, விஜயசாந்தியிடம் எந்த மாற்றமும் இல்லை.

12 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு அரங்குக்கு எப்படி சரியான நேரத்துக்கு வந்தாரோ அப்படியே இப்போதும் வருகிறார். வசன பேப்பரை கேட்டு வாங்கி படித்தார். சீனியர் நடிகை என்று பந்தா இல்லை என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு