சென்னை,
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜனநாயகன் படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இன்னும் திரைக்கு வராதநிலையில், முழு படமும் இணையத்தில் கசிந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு பல்வேறு தரைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறன்றனர். சினிமா நடிகர் , நடிகைகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விஷால், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், கார்த்தி உள்ளிட்டோர் இதற்கு தங்கள் கண்டத்தை கூறி உள்ளனர்.
சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ’கசிந்த ஜனநாயகன் படத்தை பார்க்கவும், பகிரவும். அவர்களின் உழைப்பை மதிக்க வேண்டும். என் நண்பருடன் நான் நிற்கிறேன், இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது’ என்று தெரிவித்திருக்கிறார்.
விஷால் வெளியிட்டுள்ள பதிவில், "'ஜனநாயகன்' திரைப்படத்தின் கசிந்த வீடியோக்களை பார்த்தது மிகவும் மனவருத்தமாக உள்ளது. இவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு அனைத்தும் வீணாகும் போலத் தோன்றுகிறது"என்று தெரிவித்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், ’பைரசியை ஆதரிக்க வேண்டாம். கலைஞர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை மதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
கார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகன்” கசிவு முழு திரையுலகத்தையும் காயப்படுத்தியுள்ளது. இந்த செயல் நியாயமற்றது, கடுமையாக கண்டிக்கத்தக்கது. திரைப்படக் குழுவுடன் இணைந்து நிற்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். படத்தை சரியான முறையில் பார்த்து ஆதரியுங்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.