சினிமா செய்திகள்

3 புதிய படங்களில் விக்ரம்

3 புதிய படங்களில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விக்ரம் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதில் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். தற்போது விக்ரம் நடிப்பில் தயாரான கோப்ரா படம் திரைக்கு வருகிறது. பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் சில பிரச்சினைகளால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

அடுத்து 3 புதிய படங்களில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகி இருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சமந்தா நடித்த யு டர்ன் மற்றும் லூசியா உள்ளிட்ட சில படங்களை இயக்கி பிரபலமான பவன்குமார் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க உள்ளார். கோப்ரா படத்தை எடுத்த அஜய் ஞானமுத்து இயக்கும் படமொன்றிலும் நடிக்க இருக்கிறார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு