சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் விக்ரம்

தங்கலான் விக்ரமின் மேலும் சில புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன.

விக்ரம் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் பட சாயலில் கோலார் தங்கவயல் பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது.

தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக நடந்த மோதலையும் திரைக்கதையாக உருவாக்கி உள்ளனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தங்கலான் படத்தில் விக்ரம் ஏற்றுள்ள தோற்றம் அவ்வப்போது வலைத்தளத்தில் கசிந்து படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தங்கலான் விக்ரமின் மேலும் சில புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. அதில் விக்ரம் மிரட்டலான தோற்றத்தில் நீச்சல் குளத்தில் இருக்கிறார். நீண்ட தலைமுடி தாடி மீசையுடன் ஆளே அடையாளம் தெரியாமல் இருப்பதாக ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகிறார்கள்.

விக்ரம் இந்த தோற்றத்துக்கு மாற நான்கு மணி நேரம் மேக்கப் போடுவதாக கூறுகின்றனர்

தொடர்ந்து வெயிலில் நடித்து வருவதால் அவரது நிறமே மாறி இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். அதிரடி சண்டை படமாக தங்கலான் உருவாகிறது.

விக்ரம் ஜோடியாக பார்வதி நடிக்கிறார். மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்