சினிமா செய்திகள்

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா

தினத்தந்தி

சென்னை

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி , மாதவன் இருவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது .

இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது.

மாதவன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது .

அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இந்த படத்தையும் இயக்குகிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்