சினிமா செய்திகள்

விக்ரம் மருமகனும் கதாநாயகன் ஆனார்

நடிகர் விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் இப்போது தயாரிப்பில் இருக்கிறது.

துருவை தொடர்ந்து விக்ரம் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் ஒரு படத்தில் கதாநாயகன் ஆகிறார்.

இந்த படத்துக்கு, பொல்லாத உலகில் பயங்கர கேம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, நகைச்சுவை கலந்த திகில் படம். இதில், ஐஸ்வர்யா தத்தா, ஜூலி, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். தாதா 87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ ஜி டைரக்டு செய்கிறார். ஜீ.டி.ஆர். என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்க இருக்கிறது. திருச்சி, கோவா ஆகிய இடங்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை